மாவீரர் நாள் நவம்பர் 27 - 2010





தமிழீழத்தில் மாவீரர் நாள் என்பது தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் பங்குபற்றி தாய்நாட்டுக்காக தமது உயிரை ஈந்த தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தின் உறுப்பினர்களையும், அவர்களோடு சேர்ந்து போரிட்டு உயிர் ஈந்த எல்லைப்படை துணைப்படை வீரர்களையும், புலிகளோடு இணைந்து உயிர் ஈந்த ஈழ புரட்சிகர மாணவர் இயக்க உறுப்பினர்களையும், மற்றும் கு...ட்டிமணி, தங்கத்துரை போன்ற வேறு சில ஈழப்போராட்ட போராளிகளையும் நினைவுகூர்ந்து அஞ்சலி செய்து, பெருமைப்படுத்தும் நாள் ஆகும்.


இதற்குரிய நாளாக நவம்பர் 27 ஆம் நாள் தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பினரால் 1989 ஆண்டில் அறிவிக்கப்பட்டது. நினைவுறுத்தும் நாள் போன்று மற்ற நாடுகளில் போர்வீரர்களை நினைவு கூரும் நாட்களோடு மாவீரர் நாள் ஒப்பிடத்தக்கது. ஈழத்தமிழர் அனேகர் வெவ்வேறு அரசியல் நிலைப்பாடுகளைக் கொண்டிருந்தாலும், ஈழப் போராட்டத்தில் மடிந்த வீரர்களுக்கு மரியாதை செய்வர். மற்ற இயக்கங்களுடைய போராளிகளுக்கும் இவ்வாறு வணக்கம் செலுத்தும் நாட்கள் உண்டு.


விடுதலைப் புலிகள் ஈழப் போரில் இறந்த போராளிகளை நினைவுகூருவது, மதிப்பது தமது அடிப்படைக் கடமைகளில், கொள்கைகளில் ஒன்றாகக் கருதுகிறார்கள். மாவீரர் நாளாக நவம்பர் 27 விடுதலைப் புலிகளால் 1989 அறிவிக்கப்பட்டது. தமிழீழ மாவீரர் நாளாக இந்நாளைத் தேர்ந்தெடுத்ததற்கு தமிழீழ போராட்ட வரலாற்றுடன் இணைந்த ஒரு முக்கிய காரணம் உள்ளது.


இந்த நாளில்தான் தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பின் முதலாவது போராளியான சங்கர் (செ. சத்தியநாதன்) வீரமரணம் அடைந்தார்.தொடக்க காலங்களில் மாவீரர் நாளில் ஈகைச்சுடரேற்றுவது நள்ளிரவு 12.00 மணிக்கு என்றிருந்தது. பின்னர் அது மாலை 06.05 மணிக்கு என்று மாற்றப்பட்டு விட்டது.


அதற்கும் காரணம் உள்ளது. தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் முதற் களப்பலியான சங்கர் வீரமரணமடைந்தது நவம்பர் 27, 1982 அன்று மாலை 6.05 மணிக்கு. லெப். சங்கர் தனது தாய் நாட்டுக்காக தன் இன்னுயிரை அணைத்துக் கொண்ட அதே நாள், அதே நேரமான 6.05 மணியே தமீழீழ மாவீரர்நாளில் ஈகைச்சுடரேற்றும் நேரமானது.


மாவீரர் நாள் அன்றும் போராளிகளின் இறுதிச் சடங்களின் அன்றும் ஒலிக்கப்படும் பாடல் மாவீரர் நாள் பாடல் ஆகும். இந்த பாடல் புதுவை இரத்தினதுரை அவர்களால் இயற்றப்பட்டது. வர்ணராமேஸ்வரன் அவர்கள் பாடியது.
ஈகச்சடரேற்றும் பொழுது இது பாடப்படுகிறது.


மொழியாகி எங்கள் மூச்சாகி நாளை முடிசூடும் தமிழ்மீது உறுதி!


வழிகாட்டி எம்மை உருவாக்கும் தலைவன் வரலாறு மீதிலும் உறுதி!


விழிமூடி இங்கே துயில்கின்ற வேங்கை வீரர்கள் மீதிலும் உறுதி!


இழிவாக வாழோம்! தமிழீழப்போரில் இனிமேலும் ஓயோம் உறுதி!


தாயகக்கனவுடன் சாவினை தழுவிய சந்தனப்பேழைகளே!


தாயகக்கனவுடன் சாவினை தழுவிய சந்தனப்பேழைகளே!இங்குகூவிடும் எங்களின் குரல்மொழி கேட்கிதா? குழியினுள் வாழ்பவரே!


இங்குகூவிடும் எங்களின் குரல்மொழி கேட்கிதா? குழியினுள் வாழ்பவரே!


தாயகக்கனவுடன் சாவினை தழுவிய சந்தனப்பேழைகளே!


உங்களைப் பெற்றவர் உங்களின் தோழிகள் உறவினர் வந்துள்ளோம்!


உங்களைப் பெற்றவர் உங்களின் தோழிகள் உறவினர் வந்துள்ளோம்!


அன்று செங்களம் மீதிலே உங்களோடாடிய தோழர்கள் வந்துள்ளோம்!


அன்று செங்களம் மீதிலே உங்களோடாடிய தோழர்கள் வந்துள்ளோம்!


எங்கே! எங்கே! ஒருதரம் விழிகளை இங்கே திறவுங்கள்!


எங்கே! எங்கே! ஒருதரம் விழிகளை இங்கே திறவுங்கள்!


ஒருதரம் உங்களின் திருமுகம் காட்டியே மறுபடி உறங்குங்கள்!


ஒருதரம் உங்களின் திருமுகம் காட்டியே மறுபடி உறங்குங்கள்!


ஒரு மாவீரனின் நினைவுச்சின்னம் எந்த மாவீரர் துயிலும் இல்லத்தில் உள்ளதோ அந்த இடத்துக்கு அவரது குடும்ப உறுப்பினர்கள் (பெற்றோர்கள், உடன்பிறப்புகள்) அழைத்து வரப்பட்டு மாவீரர் வாரத்தின் மூன்று நாட்கள் அதற்குரிய மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டு கௌரவ விருந்தினர்களாகக் கவனிக்கப் படுவார்கள்

அதி உன்னத அர்ப்பணிப்பு




இப் பிரபஞ்சத்தில் ஆயிரம் ஆயிரம் அர்ப்பணிபுக்கள்
அத்தனையும் எம் ஈழ புதல்வர்களின் உன்னத அர்ப்பணிப்புக்கு ஈடாகுமா ?
சத்தியத்தோடு விடை பெற்றுச் சென்ற உன்னத அர்ப்பணிப்புக்களின்
உயிர்க் கொடைகள் வெறும் ஊமைகள் ஆக முடியுமா ?

விடுதலை வேட்கைக்காய் வீட்டையே துறந்தீர்
தமிழ் ஈழம் ஒளிபெற திரியாக எரிந்தீர்.
தமிழீழ தாகத்தினை தீர்திட சென்றீர்
தமிழரின் மனங்களில் என்றும் அழியாமல் வாழ்வீர்

ஈழம் பிறப்பதற்காய் எவ்வளவைச் சுமந்தீர்கள்
எதற்கும் சாயாத சரித்திரப் புயல்கள் நீங்கள்
ஈழ மண்ணுக்கு மட்டும் புரியும் உங்கள் வீரம் பற்றி
தம்மை தம் மண்ணுக்கு விதையாக்கி சென்ற வேங்கைகள் இவர்கள் என்று.

எதிரியை கதிகலங்க வைத்த பிஞ்சுகள் இவர்கள்
புலனுக்குத் தெரியாத புனிதர்கள் இவர்கள்
மரணத்தை மகிழ்வோடு அணைத்த சரித்திர புருசர்கள் இவர்கள்
ஈழத்தை காதலித்தவர்கள் அதனுள் தமிழரின் வீரத்தை கலந்தவர்கள்
கயவனைக் கனவிலும் கலங்கவைத்தஎம் காவற் தெய்வங்கள் இவர்கள்.

மண்ணிற்காய் வீழ்ந்த மறவர்கள் நீங்கள்
வீழ்ந்தாலும் மறையாது வாழ்பவர் நீங்கள்
பூமி சுற்றும் வரை அழியாது உங்கள் பெயர்
மறையாது உங்கள் செயல்.

தோட்டாக்கள் துளைத்து உம் உயிர் மட்டும் பிரியலாம்
பெரும் கணைகொண்டு தகர்த்தாலும் உம் வீரம்
அழியாது தியாகம் மறையாது.

கனல் மீது நீங்கள் நடந்ததை பார்த்துத்தான்
எம் உடலில் உர மேற உயிரில் வீரம் கலந்தது.
நீங்கள் விட்ட இறுதி மூச்சுள்ள காற்று பட்ட
எங்கள் தேகம் சிலிர்க்க
நீங்கள் வீழ்ந்த திசைநோக்கி நடக்கின்றோம்
உங்கள் வேட்கையை அடைக்க .

நீங்கள் உறங்கிய கல்லறைகள் சிதைக்கப்பட்டன
சிதைக்கப்பட்ட இடத்தில் நரிகளின் கொண்டாட்டம்
ஆனாலும் எதிரியின் மனதில் இன்னும் இருப்பதும் உங்கள் செயல்
உங்களால் ஏற்பட்ட பயத்தின் பயன்.

"தம் உயிர் தந்து எம் உயிர் காத்த தயாளர்களே "
உமை வணங்க தடைகள் போட்டாலும்
வணங்கிய தமிழரை சுட்டு வீழ்த்தினாலும்
எம் நெஞ்சில் உமை தாங்கிடுவோம்
எங்கிருந்தாலும் உமை நினைப்போம்
எல்லைகள் தாண்டி கல்லறை வீரரை நெஞ்சில் சுமப்போம்

நீர் எமக்காக செய்த குருதி அர்ச்சனை நிச்சயம் பலிக்கும்
எதிரி அற்ற நிலம் நமக்கு நிச்சயம் கிட்டும்
நீங்கள் அணிவகுத்துக் காத்த ஈழம்
எந்த தடைகளையும் தாண்டி ஒர் நாள் மலரும்.

ஆக்கம் :
பாமினி ( தமிழீழம் )

என் அண்ணன் எழுதிய கவிதை




நாம் அணிவகுத்துள்ளோம்…நாம் தமிழ் ஈழப் படைவீரர்கள்!நாம் அணிவகுத்துள்ளோம்இழந்த எமது நாட்டை மீட்க

எதிரி நமது நாட்டைவஞ்சகமாக அபகரித்துவிட்டான்!அதைக் கண்டு நாம் அஞ்சவில்லை!
புயலெனச் சீறிஇழந்த நாட்டை மீட்கநாம் அணிவகுத்துள்ளோம்நாம் தமிழ் ஈழப் படைவீரர்கள்!

எமது படையணி கடக்க வேண்டியது நெருப்பாறென்பது
எமக்குத் தெரியும்ஆனால்…
அதைத் தாங்கக் கூடியமக்கள் ஆதரவென்னும்
கவசம் எம்மிடம் உண்டு!
எதிரியின் ஆயுதமோ பலம் பொருந்தியது!எமது ஆத்ம பலமோ
அதைவிட வலிமை வாய்ந்தது!
எதிரியின் குண்டுகள் வெடிக்கும்…ஆனால் எமது விடுதலை நெஞ்சங்கள்
எரிமலையென வெடிக்கும் சத்தத்தில்அதன் சத்தம் அமுங்கிவிடும்!
நாம் அணிவகுத்துள்ளோம்…நாம் தமிழ் ஈழப் படைவீரர்கள்!
எமது அணிவகுப்பு
எமது தமிழ்ஈழ மக்களிடையே அணிவகுத்துச் செல்கிறது!
நாம் செல்லும் இடமெல்லாம்…எமது எதிரிகள் அஞ்சி ஓடுகிறார்கள்!
மக்களிடத்தில் உள்ள பிரதேசம் சாதிமதமென்னும்
பேய்களும்அலறி ஓடுகின்றன…எமது படையணி விரைகிறது…
எம தேசத்தை மீட்க!நாம் செல்லும் இடமெல்லாம்…
காடுகள் கழனிகள் ஆகின்றன!
வெட்டிப் பேச்சு வீரர்கள்மிரண்டோடுகின்றனர்…!
உழைப்போர் முகங்களில்உவகை தெரிகிறது
ஏழைகள் முகங்களில்புன்னகை உதயமாகிறது.

ஆக்கியவர் :திரு. வே.பிரபாகரன்
(1981-ஆம் ஆண்டில் தமிழீழ தேசியத் தலைவர் திரு.வே.பிரபாகரன்
அவர்கள் எழுதிய கவிதை)

நிலவரைப் பூக்கள்



நிலவறையில் தூங்கும் எம் உயிர் மறவர்களே
நீங்கள் மண்ணை மட்டும் நேசிக்க கற்றுத் தரவில்லை
எம் தமிழ் மண்ணிற்காக
மரணத்தைக் கூட நேசிக்கக் கற்றுத் தந்தவர்கள்
ஓலைச சுவடிகளில் மட்டும்
எம் தமிழ் பணி பொறிக்கப்படவில்லை
ஒவ்வொரு தமிழனின் நினைவுச் சுவடிகளில் அல்லவா பொறிக்கப்பட்டிருக்கிறது
உங்கள் தியாகம் நாளைய புதைப் பொருள் ஆராச்சியாளனுக்கு ஒரு நற்செய்தி
பிரபஞ்சத்தில் தமிழர் என்றொரு இனம் வாழ்ந்தான்
அவன் தன்மானம் மிக்கவன் என்பதை
கரையான்கள் கூட அழிக்க முடியாத
புகழ் உடம்பல்லவா
பார் முழுதும் பறைசாற்றும்

தமிழீழத் தேசியக்கொடி




தேசியக்கொடி என்பது ஒரு நாட்டின் தேசிய இனம், நாட்டு மக்களின் பண்புகள், ஆட்சி, இறைமை என்பவை உட்பட அந்த நாட்டைக் குறிக்கின்ற ஒட்டுமொத்தமான பொதுச் சின்னமாக விளங்குகின்றது. உலகிலுள்ள எல்லா நாடுகளும் தத்தமக்கெனத் தேசியக் கொடிகளை உருவாக்கியுள்ளன.


ஒரு நாட்டின் மீது அந்நாட்டின் குடிமக்கள் கொண்டிருக்கும் மதிப...்பின், பற்றின் வெளிப்பாடே தேசியக்கொடி வணக்கமாகும். தேசியக்கொடியை ஏற்றிப் போற்றியபின்பே முதன்மையான விழாக்கள், நிகழ்ச்சிகள் என்பன ஒவ்வொரு நாட்டிலும் தொடங்குகின்றன.


தமிழீழத் தேசியத் தலைவர் வே. பிரபாகரன் அவர்களால் உருவாக்கப்பெற்ற புலிக்கொடி 1977ம் ஆண்டு தொடக்கம் தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தின் கொடியாக இருந்து வருகிறது. விடுதலைப்புலிகள் இயக்கத்தின் கொடியிலுள்ள எழுத்துக்கள் நீக்கப்பெற்ற கொடி தமிழீழத் தேசியக் கொடியாகத் தமிழீழத் தேசியத் தலைவர் வே. பிரபாகரன் அவர்களால் 1990ம் ஆண்டு அறிவிக்கப் பெற்றது. தமிழீழ விடுதலைப் போரில் வீரச்சாவடைந்த மாவீரர்களை நினைவுகூர்ந்த இரண்டாவது மாவீரர் நாளில் அதாவது 1990ம் ஆண்டு நவம்பர் 21ம் நாள் முதல் தடவையாகத் தமிழீழத் தேசியத் தலைவர் வே. பிரபாகரன் அவர்களால் அவரது பாசறையில் தமிழீழத் தேசியக்கொடி ஏற்றி வைக்கப்பெற்றது.நாடு உருவாகுதற்கு முன்பே நாட்டுமக்களால் முறைப்படி கொடிவணக்கம் செலுத்தி, கொடிவணக்கப்பாடலை இசைத்து முதன்மை விழாக்களை, நிகழ்ச்சிகளை நடத்துவதன் மூலம் தமிழீழமண் தேசியக்கொடி வரலாற்றில் ஒரு புதுமை சேர்த்திருக்கிறது.

தமிழீழத் தேசியக்கொடியை மஞ்சள், சிவப்பு, கறுப்பு, வெள்ளை ஆகிய நான்கு நிறங்கள் அழகுபடுத்துகின்றன.


தனிப்பாங்கான தேசிய இனமான தமிழீழத் தேசிய இனம் தனது சொந்த மண்ணில் தன்னாட்சி அமைத்துக்கொள்ள விளைவது அதனது அடிப்படை அரசியல் உரிமையும் மனித உரிமையுமாகும். தமிழீழ மக்கள் நடத்துகின்ற தேசிய விடுதலைப் போராட்டம் அறத்தின்பாற்பட்டது, நியாயமானது என்பதையும் தமிழீழத்தேசம் எப்பொழுதும் அறத்தின் பக்கம் நிற்குமென்பதையும் மஞ்சள் நிறம் குறித்து நிற்கிறது.

தேசிய விடுதலை பெற்ற தமிழீழத் தனியரசை அமைத்துவிடுவதால் மட்டும் முழுமையான விடுதலையைப் பெற்றுவிட்டதாகக் கொள்ளமுடியாது. தமிழீழக் குமுகாயத்திலுள்ள ஏற்றத்தாழ்வுகள் ஒழிக்கப்படவேண்டும். சாதிய, வகுப்பு முரண்பாடுகள் அகற்றப்படவேண்டும். பெண்ணடிமைத்தனம் நீக்கப்படவேண்டும். இதற்குக் குமுகாய அமைப்பிற் புரட்சிகரமான மாற்றங்களைக் கொண்டுவர வேண்டும். சமன்மையும், சமதருமமும் குமுகாய நீதியும் நிலைநாட்டப்பட வேண்டும். இத்தகைய புரட்சிகரமான குமுகாயமாற்றத்தை வேண்டிநிற்கும் தமிழீழ அரசியல் இலக்கைச் சிவப்பு நிறம் குறியீடு செய்கின்றது.


விடுதலைப்பாதை கரடுமுரடானது. சாவும் அழிவும் தாங்கொணாத் துன்பங்களும் நிறைந்தது. இவற்றைத் தாங்கிக் கொள்ளவும் விடுதலையடைந்தபின் ஏற்படப் போகும் நெருக்கடிகளையும் அச்சுறுத்தல்களையும் எதிர்கொண்டு தேசத்தைக் கட்டியெழுப்பவும் பாதுகாக்கவும் உருக்குப் போன்ற உறுதியான உள்ளம் வேண்டும். அசையாத நம்பிக்கை வேண்டும். தளராத உறுதி வேண்டும். இவற்றைக் கறுப்பு நிறம் குறித்துக் காட்டுகின்றது.


விடுதலை அமைப்பும், மக்களும், தலைவர்களும் தூய்மையையும், நேர்மையையும் கடைப்பிடிக்க வேண்டுமென்பதை வெள்ளை நிறம் குறித்து நிற்கிறது..

தலைவன் வருவான்டா தமிழா..





ராஜா ராஜா சோழன் கொடுத்தாண்ட புலிக்கொடி .
தொடுத்தான்ர என் அண்ணன் ஈழத்தில் சோழப்போரை.
என் அண்ணன் மறுபடியும் வருவான்ரா
தமிழ் ஈழம் வென்று தருவான்ரா
தளராதே தமிழா தளராதே...

தமிழீழத்தில் புலிக்கொடி பறக்கும் தளராதே தமிழா .
முப்படையும் வரும் மும் முனையிலும் மோதும் .
பண்டாரவன்னியன் ஆண்டவன்னி மண்ணடா.
என் அண்ணன் ஈழமண்ணில் எதிரிகள் யாவரையும் விடப்போவதில்லை .
எதிரியின் உடல்கள் யாவும் வந்து குவியுமடா வன்னிமண்ணிலே.
தளராதே தமிழா தளராதே...
நீரில் எரியும் திபமடா வற்றாப்பளை தீயில் எரிவதா.
அண்ணன் விடப் போவதில்லையடா .
இங்கு எங்கே சிங்களவனை ஆழவிட்டது யாரடா .
அண்ணன் படை விரட்டுமடா .
இங்கு தமிழன் ஆளுவானடா .
தளராதே தமிழா தளராதே..

அண்ணன் சொல்லில் அண்ணன் படை தமிழீழம் படைக்குமடா
காலம் வரும் நல்ல நேரம் வரும் .
கண்ணிமைக்கும் நேரத்தில் அண்ணன் படை பாயும் .
எதிரி கண்ணில் ஈழமண்ணை துவுமாடா .
தளராதே தமிழா தளராதே .

அண்ணன் படை தமிழீழம் வென்று தரும்.
மகிந்தாவின் மானம் தெருவெங்கும் நாய் இழுக்கும் .
தமிழனின் வீரம் புலிக்கொடியாய் வானில் பறக்குமடா .
சோனியாவின் துண்டு சாணியாக மாறும் .
தளராதே தமிழா அண்ணனின் கையில் இன்னும் வீரமுண்டு .
தளராதே தமிழா தளராதே தமிழா தளராதே தமிழா


லெப்ரினன் சீலன்


இவர் தமிழீழ தலைநகர் திருமலையில் பிறந்தார் லெப்ரினன் சீலன். அண்ணாவின் சொந்த பெயர் லூக்காஸ் சள்ஸ் அன்ரனி. சிறுவயதில் இருந்தே இலங்கை இராணுவதின் கொடும்செயலை பார்த்து விரக்தி அடைந்தார். பாடசாலையில் படிக்கும் போது இலங்கை கொடியினை எரித்தார் . அதற்காக தண்டனையும் அனுபவித்தார்.


சரி, அமைப்புக்குள் எப்படி வந்தார் திருமலையில் ஆட்களை சேர்க்க போராளி ஒருவர் சென்று இருந்தார் அவர் எமது அமைப்பு பற்றி விளக்கம் அளித்தார் அவரும் அமைப்பில் இணைந்து கொண்டார். இவர் அந்த காலகட்டதில் அமைப்பில் தலைவருக்கு நெருக்கடி ஏற்பட்டது. அப்போது எல்லாம் தலைவருக்கு உற்றத்துணையாக இருந்தவர் இந்த சீலன் அண்ணா. இவருக்கு ஆசீர் இதயசந்திரன் என பல பெயர் உண்டு தலைவர் சொல்லியிருக்கிறார். தான் உயிருடன் இருப்பதுக்கு சீலன் தான்காரணம் எண்டு தலைவரின் உயிர் தோழன் இந்த சீலன் அண்ணா புலிகளின் இராணுவத்திற்கு எதிரான முதலாவது தாக்குதலை இவர் செய்தார். அத்தாக்குதல் பற்றி 15.10.1981 யாழ்ப்பாணம் கே.கே.ஸ் வீதியில் கடைக்கு பொருட்கள் வாங்கவந்த இராணுவதின் மீது தாக்குதல் ஒன்றை செய்து 2 இராணுவதை கொண்டு ஒரு 303 ரக துப்பக்கியினை கைப்பற்றினார். இவரின் விருப்பம் எல்லாம் இராணுவதின் ஆயுதத்தினை பறித்து அவர்களை தாக்குவதன் ஒரு சம்பவம் யாழ்ப்பாணம் இணுவில் பகுதியில் இரயில்வே கடமையில் இருந்த இராணுவதை தாக்கி ரி50 ரக ஆயுதம் ஒன்றை கைப்பற்றி பாசறைக்குள் சேர்த்தார் இவரின் சாதனைகள் தொடர்ந்தது இராணுவதிற்கு இவரின் பெயர் கேட்டாலே நடுக்கம்.

இந்த சாதனையாளன் நம்மை விட்டு பிரியும் அந்த வேதனையான நாள் 15-07-1983 பிற்பகல் 3 மணி மீசாலை கிராமம் அந்த வழியால் இயந்திர துப்பாக்கி களுடன் துவிச்சக்கர வண்டியில் சீலன் அண்ணா தலைமையில் போராளிகள் பயணிக்கிறார்கள் துரோகிஒருவனின் காட்டி கொடுப்பால் இராணுவதின் முற்றுகைக்குள் அகப்பட்டு உடம்பில் குண்டு துளைத்த போது தன்னை சுட்டு விட்டு போகும்படி மற்றபோராளிக்கு கட்டளை இட்டார் தளபதியின் கட்டளைக்கு இணங்க அவரும் சுட்டுவிட்டு அவரின் ஆயுதத்தையும் எடுத்து செல்கிறார் அவர் இறக்கும் போது கூறியது, ஆயுதம் கவனம் இப்படி தமிழரின் விடிவுக்காக பாடுபட்ட போராளிதான் லெப்ரினன் சீலன் அண்ணா இவரின் பெயர் சுமந்து நிற்பதுதான் சால்ஸ் அன்ரனி சிறப்பு படையணி அவரின் சாதனைகள் ஆலமரம் அளவு நான் சொன்னது அதன் விழுதளவு எமது மக்கள் தமது பிள்ளைகளுக்கு இவர்களின் வீரத்தை சொல்லி கொடுங்கள் நன்றி.

தேசியதலைவரின் சிந்தனைகள்

"நான் பெரிது நீ பெரிது என்று வாழாமல் நாடு பெரிதென்று வாழுங்கள். நாடு நமக்குப் பெரிதானால் நாம் எல்லோரும் அதற்குச் சிறியவர்களே, எமது நிலையற்ற வாழ்விலும் பார்க்க நாட்டின் வாழ்வே பெரிது"